தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு நிகழ்வு 2026 மார்ச் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகுந்த சிறப்புடனும் ஒழுங்குடனும் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு டாக்டர் ARM. ஹாரிஸ் MBBS (பேராதனை) அவர்கள் தலைமை தாங்கினார். விழாவின் பிரதம விருந்தினராக அஷ்-ஷெய்க் NPM. அபூபக்கர் சித்தீக் (மதனி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் பட்டமளிப்பு நிகழ்வுரையை உரையை அஷ்-ஷெய்க் AL.பீர் முஹம்மது (காஸிமி) அவர்கள் வழங்கினார் .
பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். குறிப்பாக அஷ்-ஷெய்க் SH. ஆதம் பாவா (மதனி), பிரதேச செயலாளர் AM. அப்துல் லத்தீப் (LLB), பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் அல்ஹாபிழ் MSM. ரஸ்ஸான் (நளீமி) ஆகியோர் கொளரவ விருந்தினர்களாகவும், Mr. AL. Khaleelul Rahman M.A, As-Sheikh. Dr.MIM Jazeel (Salafi) Ph.D Mr. ATM. Rafee Commissioner, Municipal Council, Kalmunai என்போர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் ஆவணப்படம் வெளியீடு, நினைவிதழ் வெளியீடு ஆகியவை இடம்பெற்றதுடன், பட்டங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பட்டங்களை கல்லூரியின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் டாக்டர் ML. முபாரக் (மதனி) அவர்கள் வழங்கி வைத்தார்கள் . 169 மாணவியர்கள் தங்களின் கல்விப் பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியதற்கான பெருமிதத்துடன் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர் .
கல்லூரிப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் டாக்டர் ML. முபாரக் (மதனி) அவர்கள் தனது உரையில் மாணவியரின் சாதனைகளை பாராட்டி, அவர்களின் எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்வு கல்லூரியின் நிருவாக செயலாளர் எம். பஹ்றுதீன் B.A அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வு, கல்லூரியின் கல்வி வளர்ச்சியையும், சமூகத்திற்கு திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.










