18.05.2026 அன்று தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியில், 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்காக இஸ்லாமிய நாகரிகம் பாடத்துடன் தொடர்புடைய விசேட கற்றல் வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கினை அஷ். ஷேஹ் ஏ.எம். சப்ரி மதனி அவர்கள் வழிநடத்தினர்கள்.
மாணவிகள் பாடத்தை முறையாக எவ்வாறு கற்க வேண்டும், தற்போதிலிருந்தே பரீட்சைக்காக எவ்வாறு தயாராக வேண்டும், நேர மேலாண்மை, வினாத்தாள் அணுகுமுறை உள்ளிட்ட பல முக்கிய வழிகாட்டுதல்கள் இந்நிகழ்வின் மூலம் வழங்கப்பட்டன.
காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மாணவிகளுக்கு பயனும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




