“அழகு, கலாச்சாரம் மற்றும் நெகிழ்ச்சியின் நிலம்” என்ற தொனிப்பொருளில், எமது இலங்கை திருநாட்டின் 78வது சுதந்திர தினமானது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஆர்.நுவீஸ் ஸலபி, மக்கி Ph.D (r) அவர்களின் தலைமையில், இன்று 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி புதன்கிழமை எமது கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில், நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளால் பல்வேறுபட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க் ஏ.சி.தஸ்தீக் ஹாமி, மதனி M.A அவர்களால் “இஸ்லாம் கூறும் சகவாழ்வு” எனும் தொனிப்பொருளில் விஷேட உரையும், உதவி பணிப்பாளர் அவர்களால் “இஸ்லாம் கூறும் நாட்டுப்பற்று” எனும் தலைப்பில் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லூரியின் அனைத்து விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
“தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்”










