முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

2024/25 கல்வியாண்டின் முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (15) சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை கல்லூரியின் உத்தியோகபூர்வ மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கலாம். மொபைல் அப்ளிகேஷன் பற்றிய தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கீழுள்ள காணொளியைப் பார்வையிடவும். www.dhlc.edu.lk எனும் கல்லூரியின் வலைத்தளப் பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக உதவிக்கு அலுவலக நேரத்தில் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 077-425-8515 பணிப்பாளர்15.03.2025
அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு

மருதமுனையின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு மருதமுனைக்கு மட்டுமல்ல ஆலிம் சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும். 1944. 9. 25 ஆம் தேதி அன்று மருதமுனை மண்ணில் பிறந்த இவர்கள் தனது 9 ஆவது வயதில் மார்க்க கல்வியை கற்பதற்காக வெலிகாமத்தில் அமைந்துள்ள மதரஸத்துல் பாரி எனும் ஒரு பழமையான கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் ஆலிமாக பட்டம் […]
பெற்றோர் கூட்டம் -2025

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் ஜனவரி 18,19 சனி மற்றும் ஞாயிறு தினங்களில 2025 ஆம் ஆண்டின் முதலாவது பெற்றோர் கூட்டம் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை சிறப்பாக இடம்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ். கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் Dr. ARM. Haris அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. ML. Mubarak (madhani), செயலாளர் M. Bahrudeen ஆசிரியர், […]
சர்வதேச அறபு மொழிப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு

தாறுல்ஹுதா அறபு மற்றும் இலாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியில் சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் (18.12.2024) கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 12.01.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணி தொடக்கம் மதியம் 1.50 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் . கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் கௌரவ Dr .ARM. ஹாரிஸ் […]
Special Motivational Program -2024 December

2024 டிசம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மாணவிகளுக்கான Special Motivational Program ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 தொடக்கம் 10.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் , உதவிப்பணிப்பாளர் மற்றும் அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தினத்தில் கல்லூரிக்கு விஷேட வருகை தந்திருந்த Dr. Alavi Sheriffdeen நளீமி (School for Pioneers DASSP) அவர்களும் சிறப்பு வளவாளராக கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் […]
சர்வதேச அறபுமொழி தின சிறப்புநிகழ்ச்சி – 2024

டிசம்பர் 18 புதன்கிழமை சர்வதேச அறபுமொழி தினத்தை முன்னிட்டு எமது கல்லூரி சிறப்பு நிகழ்வொன்றை நடாத்தியது. இந்நிகழ்வானது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஒருங்கிணைத்து அறபு மொழியின் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் அமையப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக எமது கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களால் Dr. PMM. IRFAN நளீமி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வளவாளராகவும் அழைக்கப்பட்டிருந்தார். மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது தாய்லாந்து பிரின்ஸ் ஆப் சொக்லாந்து […]
சர்வதேச அரபு மொழிப் போட்டி – டிசம்பர் 2024

அரபு மொழியின் ஆழமான செழுமையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் ஒரு மதிப்பு மிக்க நிகழ்வான சர்வதேச அரபு மொழிப்போட்டி தாருல் ஹ_தா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில், கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் வழிகாட்டலில் எதிர் வரும் (16-18.12.2024) ம் திகதிகளில் நடாத்தப்பட இருக்கிறது. கல்லூரியால் நடாத்தப்படும் இந்தப் போட்டியானது உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மொழிகளில் ஒன்றிற்கான ஆழ்ந்த பாராட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த நிகழ்வில் அரபு […]
மாணவத் தலைவிகள் நியமனம்.

நான்காம் தர மாணவிகள் கா.பொ.த உயர்தரப்பரீட்சை விடுமுறையில் சென்றுள்ளமையால் 2024/25 கல்வியாண்டிற்கான தற்காலிக மாணவத்தலைவிகள் சென்ற 01.11.2024 அன்று கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி, Ph.D அவர்களின் வழிகாட்டலில், உதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர்.நுவீஸ் மக்கி MA, Ph.D. ® அவர்களினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டனர். மாணவத் தலைவிகளுக்கான Tag கள் மாணவத் தலைவிகளுக்குப் பொறுப்பான விரிவுரையாளர் மௌலவியா ஏ.எச். தானியா ஹுதாயிய்யா B.A அவர்களினால் அணிவிக்கப்பட்டது. Assistant Head Prefect ஆக மாணவி ஏ.ஜே. பாத்திமா […]
கல்லூரி அனுமதிக்கான பரீட்சை -2024/25

மேற்படி பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01/06/2004 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரியில் இடம்பெறும். விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பிவைக்க்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் 30.05.2024 ற்கு முன்னர் கிடைக்கப் பெறாவிடின் 0774258515 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும்

தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும் 31. 3. 2024 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாகிய கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மதனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வின் இரண்டாம் பகுதியில் அடுத்த மூன்று வருடத்திற்கான புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகத்தின் தலைவியாக கல்லூரியின் முதல் தொகுதி […]