நூலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு

தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 5வது தொகுதி மாணவிகளில் ஒருவராக கற்று வெளியாகிய மாணவி M.N. ஸப்னா (ஹுதாயிய்யா) அவர்களினால், மரணித்த தனது கணவனின் பெயரில் கல்லூரியின் நூலகத்திற்கு பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.. அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கல்லூரி நிருவாகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது நன்கொடைகளுக்கு நிரந்தர தர்மத்தின் முழுக் கூலியையும் வழங்குவானாக.

பிரியாவிடை வைபவவும் கெளரவிப்பு நிகழ்வும்

தாறுல் ஹுதா மற்றும் மகளிர் அரபு கல்லூரியில் ஆசிரியர்களாகவும் நிருவாக உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்தவர்களை கெளரவிக்கும் பிரியாவிடை வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம் பெற்றன. இந் நிகழ்வில் மெளலவியாக்களான 1. அப்னா அமீர் (BA) ஹுதாயிய்யா 2. அல் – ஹாபிழா ஸஜீனா ஜஃபர் ஹுதாயிய்யா 3. இன்ஸாப் ஸலாஹுதீன் (BA) ஹுதாயிய்யா 4. ஆகிபா இஸ்மாஈல் (BA) ஹுதாயிய்யா என்போருக்கான பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கல்லூரின் […]

2025 ம் ஆண்டிற்குரிய புதிய மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 👉விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். 👉விண்ணப்பங்களை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் https://dhlc.edu.lk/wp-content/uploads/2025/04/new-intake-application-form-2025-26.pdf 👉 ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து நிரப்பி அனுப்பவேண்டிய அவசியம் இல்லை. https://dhlc.edu.lk/apply-online/ […]

தாருல் ஹுதா பழைய மாணவிகள் அமைப்பின் 3 வது வருடாந்த ஒன்றுகூடல்

தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பின் மூன்றாவது வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 2025.03.24 திங்கட் கிழமை, அமைப்பின் தலைவி மௌலவியா ஏ.எச். தானியா ஹுதாயியா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ தலைவர் டொக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ், பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி, உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி. M.A உட்பட அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.  இந் […]

முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

Concept of exams and tests, close up

2024/25 கல்வியாண்டின் முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (15) சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை கல்லூரியின் உத்தியோகபூர்வ மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கலாம். மொபைல் அப்ளிகேஷன் பற்றிய தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கீழுள்ள காணொளியைப் பார்வையிடவும். www.dhlc.edu.lk எனும் கல்லூரியின் வலைத்தளப் பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக உதவிக்கு அலுவலக நேரத்தில் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 077-425-8515 பணிப்பாளர்15.03.2025

ஸைதுல் ஃபவாயித் உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு

எழுத்தாற்றலை வளர்க்கும் முகமாக எமது கல்லூரி மாணவிகளினால் பிரசுரிக்கப்படும் ஸையிதுல் பவாயித் எனும் சுவர் சஞ்சிகையினை இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிட்டு வருகின்றனர். வருடத்தில் ஒருமுறை ரமழான் மாதத்தில் உத்தியோகபூர்வமாகவும் விமரிசையாகவும் வெளியிடப்படும். அதன் தொடரில்  இம்முறையும் (2025) ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி Dr M.L. முபாரக் மதனி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி எம்.ஏ அவர்கள் […]

மாணவர் மன்றம்-06.02.2025

எமது கல்லூரியில் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் முகமாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மாணவர் மன்றங்கள் வழமை தோறும் சிறப்புற இடம்பெற்று வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில்  இன்ஷாஅல்லாஹ்  6.2.2025 வியாழக்கிழமை இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் றுகைய்யா குழுவினரால் இம்முறைக்கான மாணவர் மன்றம் நடாத்தப்படவுள்ளது. பின்வரும் மாணவிகள் மன்றத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு

மருதமுனையின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு மருதமுனைக்கு மட்டுமல்ல ஆலிம் சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும். 1944. 9. 25 ஆம் தேதி அன்று மருதமுனை மண்ணில் பிறந்த இவர்கள் தனது 9 ஆவது வயதில் மார்க்க கல்வியை கற்பதற்காக வெலிகாமத்தில் அமைந்துள்ள மதரஸத்துல் பாரி எனும் ஒரு பழமையான கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் ஆலிமாக பட்டம் […]

வகுப்பறை நூலகம் – திறப்பு நிகழ்வு

கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. எம்.எல். முபாரக் (மதனி) அவர்களின் பணிப்புரையின் பேரில் மாணவிகளின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், வாசிப்பின் மீதுள்ள அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் என ஒவ்வொரு வகுப்பறைக்குமான தனித்தனி வகுப்பறை நூலகங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் எமது கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் 2025 ஜனவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வகுப்பறை நூலகங்கள் அனைத்தும் உத்தியோக பூர்கமாக திறந்து வைக்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வானது எமது கல்லூரியின் கௌரவ பணிப்பாளர், காலாநிதி Dr. எம்.எல். முபாரக் […]