தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி நிர்வாக சபை தலைவர் டொர்டர். ஏ.ஆர்.எம். ஹாரிஸ் (MBBS) அவர்கள் தனது வைத்திய சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை முன்னிட்டு அவர்களுக்கான பணி நயப்பு நிகழ்வு 28.12.2025 ஆம் திகதி கல்லூரி மண்டபதில் நடைபெற்றது .
நிர்வாகிகள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் தலைமையிலும் கல்லூரியின் கௌரவ செயலாலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம். பஹ்றுத்தீன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது. இதில் கல்லூரியின் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக சபை தலைவர் டொர்டர். ஏ.ஆர்.எம். ஹாரிஸ் (MBBS) அவர்களுக்கு நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் நினைவு சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இதன் போது கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச். றியால் காஷிபி. M.A, மற்றும் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி ஆகியோரால் விஷேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்தி கொள்வானாக !










