சர்வதேச அரபு மொழி தினம்-18/12/2025

சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு 20/12/2025 சனிக்கிழமை அன்று தாருல்ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி மாணவிகளின் அரபு மொழியினை விருத்தி செய்வதற்கான போட்டி நிகழ்வுகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ளுஹர் தொழுஹையினை தொடர்ந்து 12.30pm-3.00pm வரை கல்லூரியின் விரிவுரையாளர்கள் குழாத்தினால் நடாத்தப்பட்டது .

முதல் நிகழ்வாக அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் போட்டி நிகழ்வுகள் தொடர்பான அறிமுகத்தையும்,மாணவிகளுக்கான அறிவுரைகளையும் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ML.முபாரக் (மதனி)அவர்கள் வழங்கினார்கள் .

அதனை தொடர்ந்து மாணவிகளுக்கு ,

  1. கிரகித்தல்(الاستماع والاستيعاب )

2. அரபு மொழியிலான உரையாடல் (التحدث والحوار)

3. அரபு மொழி வாசிப்பு (القراءة)

4.லட்சாதிபதி ?(من سيربح مليون؟)

போன்ற கருப்பொருட்களில் நிகழ்வுகளும் போட்டிகளும் நடாத்தப்பட்டன .

போட்டி நிகழ்சிகள் இனிதே நிறைவடைந்த பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

போட்டி நிகழ்சிகளில் பின்வரும் மாணவிகள் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.

போட்டிகள் தரம் வெற்றியாளர்
கிரகித்தல்4th YearSH.Sofna
3rd YearAF.Ajeefa
WF.Ashfa
2nd YearSL.Rana
1st YearMF.Jana
MNF.Zuha
உரையாடல்4th YearJF.Liba
3rd YearJF.Minza
2nd YearJF.Simha
1st YearRF.Nuha
வாசிப்பு
4th Year
3rd YearJF.Leena
2nd YearATF.Jazna
1st YearMF.Reem
லட்சாதிபதி ?
4th YearNF.Mushrifa
3rd YearMK.Leena Kais
2nd YearMSF.Nuha
1st YearMRF.Reefa

நிகழ்வுகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதி வரை அரபு மொழியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு போட்டிகள் இடம் பெற்றது மாணவிகளை அரபு மொழியின் பக்கம் ஆர்வம் ஊட்டுவதாக அமைந்தது .

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.