விழிப்புணர்வுக் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் 18.11.2025 ஆம் திகதியன்று எமது கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சியொன்று நடத்தப்பட்டது .

கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இக்கருத்தரங்கானது 12.00 மணியளவில் நிறைவடைந்தது . இதன்போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலிருந்து (CONSUMER AFFAIRS AUTHORITY) அஷ் ஷெய்க் NMM. Rifkan (Haami) , ALA. Mendis, மற்றும் MHM. Rifaj ஆகிய புலனாய்வு உத்துயோகத்தர்கள் கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர்.

புலனாய்வு உத்தியோகத்தர் MHM. Rifaj அவர்கள் ,

  • நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் .
  • வியாபார ஊழல் மோசடிகள், மற்றும் வியாபார விதிமுறைகள் .
  • தடை செய்யப்பட முகப்பூச்சுக் கிரீம்கள் , மற்றும் ஏனைய பொருட்கள்
  • முறைப்பாடு செய்வதும், எமது சுற்றிவளைப்புக்களும் மற்றும் சட்ட நடவடிக்கைகளும் .

ஆகிய தலைப்புகளில் பல தகவல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் எமது கல்லூரியின் கௌரவ பணிப்பாளர், காலாநிதி Dr. எம்.எல். முபாரக் (மதனி), உதவிப்பணிப்பாளர் அஷ் ஷெய்க் R.Nuvees (மக்கி), கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரியின் அனைத்து மாணவிகளும் கலந்து பயனடைந்தனர்.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.