எழுத்தாற்றலை வளர்க்கும் முகமாக எமது கல்லூரி மாணவிகளினால் பிரசுரிக்கப்படும் ஸையிதுல் பவாயித் எனும் சுவர் சஞ்சிகையினை இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிட்டு வருகின்றனர்.
வருடத்தில் ஒருமுறை ரமழான் மாதத்தில் உத்தியோகபூர்வமாகவும் விமரிசையாகவும் வெளியிடப்படும்.
அதன் தொடரில் இம்முறையும் (2025) ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி Dr M.L. முபாரக் மதனி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி எம்.ஏ அவர்கள் உட்பட அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆக்கங்களை எழுதி பிரசுரித்த மாணவிகளில் HAROON FATHIMA RINA எனும் இரண்டாம் வருட மாணவிக்கு குலுக்கல் மூலம் பெறுமதியான பரிசு கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது .