அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் 18.11.2025 ஆம் திகதியன்று எமது கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சியொன்று நடத்தப்பட்டது .
கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இக்கருத்தரங்கானது 12.00 மணியளவில் நிறைவடைந்தது . இதன்போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலிருந்து (CONSUMER AFFAIRS AUTHORITY) அஷ் ஷெய்க் NMM. Rifkan (Haami) , ALA. Mendis, மற்றும் MHM. Rifaj ஆகிய புலனாய்வு உத்துயோகத்தர்கள் கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர்.
புலனாய்வு உத்தியோகத்தர் MHM. Rifaj அவர்கள் ,
- நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் .
- வியாபார ஊழல் மோசடிகள், மற்றும் வியாபார விதிமுறைகள் .
- தடை செய்யப்பட முகப்பூச்சுக் கிரீம்கள் , மற்றும் ஏனைய பொருட்கள்
- முறைப்பாடு செய்வதும், எமது சுற்றிவளைப்புக்களும் மற்றும் சட்ட நடவடிக்கைகளும் .
ஆகிய தலைப்புகளில் பல தகவல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் எமது கல்லூரியின் கௌரவ பணிப்பாளர், காலாநிதி Dr. எம்.எல். முபாரக் (மதனி), உதவிப்பணிப்பாளர் அஷ் ஷெய்க் R.Nuvees (மக்கி), கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரியின் அனைத்து மாணவிகளும் கலந்து பயனடைந்தனர்.






