கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. எம்.எல். முபாரக் (மதனி) அவர்களின் பணிப்புரையின் பேரில் மாணவிகளின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், வாசிப்பின் மீதுள்ள அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் என ஒவ்வொரு வகுப்பறைக்குமான தனித்தனி வகுப்பறை நூலகங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் எமது கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் 2025 ஜனவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வகுப்பறை நூலகங்கள் அனைத்தும் உத்தியோக பூர்கமாக திறந்து வைக்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வானது எமது கல்லூரியின் கௌரவ பணிப்பாளர், காலாநிதி Dr. எம்.எல். முபாரக் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு கல்லூரியின் அனைத்து விரிவுரையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். காலை 10 மணி அளவில் ஆரம்பமான இந்நிகழ்வின் இரண்டாம் கட்டமாக கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மாணவிகளுக்கான “வாசிப்பை வாசிப்போம்” எனும் கருப்பொருளில் ஒரு பயிற்சிப் பட்டறையும் இடம்பெற்றது.
பிற்பகல் 12:30 மணி அளவில் அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்தன. அல்ஹம்துலில்லாஹ்
“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு”




