பிரியாவிடை நிகழ்வு -2025

கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி தமது சேவை காலத்தை கல்லூரி மாணவர்களுக்காக அர்ப்பணம் செய்த கல்லூரியின் விரிவுரையாளர்களான எமது ஆங்கில பாட ஆசிரியர் SINNA LEBBAI ANVER KHAN (B.A, M.A, Dip in ENG, B.A in HL) அவர்களுக்கும் ,அரபு பாட ஆசிரியர்களான MOULAVIYA ABDUL MAJIDH FATHIMA ZEENA (B.A) மற்றும் MOULAVIYA ABDUL RAUF FATHIMA SUJA ( HUDHAYIYYA, (B.A))அவர்களுக்கும் கல்லூரியின் நூலகரான ,ஆசிரியை MOULAVIYA MOHAMED KALEEL MUZNA (HUDHAYIYYA, B.A(Hons))ஆகியோருக்குமான பிரியாவிடை நிகழ்வு கல்லூரியின் நிர்வாகம், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் 27.12.2025 ஆம் திகதி சனிக்கிழமை, கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 12.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிர்வாகம், விரிவுரையாளர்கள மற்றும் மாணவர்கள் சார்பாக பெறுமதியான பரிசில்களும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் விஷேட பகல் விருந்தும் வழங்கப்பட்டது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அல்ஹம்து லில்லாஹ்

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.