எமது கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க் எம்.எச். அஸ்பர் ஹஸன் (பலாஹி) B.A. அவர்களினால் எழுதப்பட்ட ” நோன்பு ஒரு பிரயோக வழிகாட்டல் ” எனும் நூலின் வெளியீட்டு வைபவம் இன்று 2026.02.16 ஆம் திகதி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம் . எல். முபாரக் (மதனி), கல்லூரியின் கௌரவ செயலாளர் எம் .பஹ்ருதீன் ஆசிரியர், உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர்.நுவீஸ் (மக்கி), அனைத்து விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இந்நூல் பற்றிய அறிமுக உரையானது கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டதோடு நூலாசிரியர் அவர்களால் நன்றியுரையும் வழங்கப்பட்டது.
தமிழ் பேசும் அனைத்து முஸ்லிம்களின் வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டியதும் படிக்கப்பட வேண்டியதுமான ஒன்றாக இந்நூலும் இந்நூலின் உள்ளடக்கமும் காணப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
இறுதியில் கல்லூரிக்கு 100 புத்தகங்களை நூலாசிரியர் அவர்கள் அன்பளிப்புச் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








