தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பின் மூன்றாவது வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 2025.03.24 திங்கட் கிழமை, அமைப்பின் தலைவி மௌலவியா ஏ.எச். தானியா ஹுதாயியா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ தலைவர் டொக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ், பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி, உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி. M.A உட்பட அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் இறுதியாக பட்டம் பெற்று வெளியாகிய ஆலிமாக்களை உத்தியோக பூர்வமாக அமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டதோடு, நிகழ்வின் விஷேட அம்சமாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர்களில் ஒருவரான ஏ.எல்.ஏ.எஸ்.எம். முபாரக் பாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நினைவாக கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பான ஸனாபிலுல் ஹுதாவினால் 220, 000 ரூபாய் தொகை பணம் ஸதகா ஜாரியாவாக கல்லூரிக்கு வழங்கப்பட்டது.



மேலும் இந்நிகழ்வில் அஷ்ஷேய்க். ஏ.எல்.ஏ.எஸ்.எம். முபாரக் பாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உன்னதமான சேவையினை நினைவு கூரும் முகமாக ஸனாபிலுல் ஹுதா அமைப்பினரால் வடிவமைக்கப்பட்ட காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.