சான்றிதழ் (Provisional Certificate) வழங்கலும் சஞ்சிகை வெளியீடும்-2025

2024/25  கல்வி ஆண்டில் மவ்லவிய ஆலிமா ஹுதாயிய்யா பட்டம் பெற்று வெளியாகும் மாணவிகளுக்கான Provisional Certificate வழங்கும் நிகழ்வு 27.09.2025 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ML.முபாரக் மதனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 

நிகழ்வின் முதல் அம்சமாக 2025 விடுகை வருட மாணவிகளால் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதிய பக்கமாக மஜல்லதுல் ஹுதா எனும் நாமம் கொண்ட சஞ்சிகை உத்தியோகபூர்வமாக விடுகை வருட மாணவிகளின் சஞ்சிகை குழுவினால் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி ML.முபாரக் மதனி அவர்களுக்கு வழங்கி வெளியீடு செய்யப்பட்டது.

சஞ்சிகை அறிமுகம், கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களில் ஒருவரான அஷ் ஷெய்க் அஸ்பர் ஹஸன் பலாஹி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.


சஞ்சிகையின் முதற்பிரதி கல்லூரியின் கௌரவப் பொருளாளர் HALAM. Jahfar ஹாஜியார் ,B.A அவர்களுக்கும் , ஏனைய நிர்வாக உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் விடுகை வருட மாணவிகளின் பெற்றோர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

விரிவுரையாளர்கள் சார்பாக கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி அவர்களால் பட்டம் பெற்றுச் செல்லும் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கப்பட்டது.


பெற்றோர்கள் சார்பாக அஷ்ஷெய்க். றபீக் பிர்தௌஸி அவர்களால் கருத்துரையும் வாழ்த்துரையும் நிகழ்த்தப்பட்டது.

அத்தோடு விடுகை வருட மாணவிகளான SF.Ulfa, MHF. Nuftha, MT.Sumayya, R.Rashadha Rafeek, AJF. Hafna ஆகிய மாணவிகளால் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.


அடுத்த நிகழ்வாக கல்லூரியின் நிர்வாக சபை கௌரவ தலைவர் Dr.ARM.ஹாரிஸ் அவர்களின் உரை ஒலிப்பதிவு மூலம் வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக பின்வரும் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

  1. உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்ற மாணவிகள்
  1. MS.Adhna Simar
  2. NF.Simasa
  3. MF.Ahfara Banu
  4. SF.Zamha
  5. R.Rashadha Rafeek


2. உயர்தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் A சித்தி பெற்ற மாணவி

MHF.Nufdha


3. மௌலவியா பரீட்சையில் அதி உயர் சித்தி (MUMTHAAZ) பெற்ற மாணவிகள்

  1. NF.Simasa (Akkaraipattu)
  2. R.Rashadha Rafeek (Kekkirava)
  3. MSF.Ana (Sainthamaruthu)
  4. MHF.Nufdha (Kalmunai)
  5. MS.Adhna Shimar (Maruthaminai)
  6. JF.Rifna (Addalachenai)
  7. SF.Zamha (Kalmunai)
  8. MF.Ahfara Banu (Sainthamaruthu)
  9. MTF.Thameema (Kattankudy)
  10. MRF.Afra (Mavadippalli)
  11. SF.Ulfa (Kalmunai)
  12. S.Sana Sireen (Akkaraipattu)
  13. J.Shahidha (Akkaraipattu)
  14. TL.Jazilul Hasna (Polannaruva)
  15. FAF.Nashath Aara (Warupaththanchenai)
  16. SF.Nufra (Sammanthurai)
  17. S.Jewthana Nafleen (Sammanthurai)
  18. MR.Ashfah (Maruthyamunai)
  19. SF.Saifa (Kalmunai)
  20. MH.Hamdha (Arayampathy)
  21. AKF.Rustha (Maruthamunai)
  22. MT.Sumaiya (Sainthamaruthu)
  23. MIF.Sama (Addalaichenai)
  24. SF.Ulfa (Addalaichenai)
  25. LF.Imsama (Central camp)
  26. U.Hoorul Nuha (Pottuvil)
  27. MLF.Minsha (Sammanthurai)
  28. MFF.Bafan (Sainthamaruthu)
  29. AK.Hafna (Akkaraipattu)
  30. AJF.Shayan Hanoof (Galewela)
  31. AA.Thahani (Malayadikiramam)
  32. NF.Nuha (Natpittimunai)
  33. MU.Kathija Haathoon (Kattankudy)
  34. MA.Amna (Colombo)
  35. MRF.Rafsana (Kattankudy)
  36. AJF.Hafna (Warippathanchenai)


தொடர்ந்து மௌலவியா பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற அனைத்து மாணவிகளுக்குமான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி ML.முபாரக் மதனீ அவர்களால் பணிப்பாளர் உரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் R.நுவீஸ் மக்கி அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது.

இறுதியாக பெற்றோர்கள் மற்றும் அனைத்து மாணவிகளுக்குமான மதிய விருந்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!



Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.